கிழக்கு மாகாணத்தில் 17918 பேர் மாற்றுத்திறனாளிகள்

கிழக்கு மாகாணத்தில் 17918 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார்..

கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகளின் பரா விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்(5,6.8.2017) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போது அந்த வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் இவர்களில் அம்பாறை மாவட்டத்தில் 6803 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 6681பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 4434 பேரும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

அவ்வாறே மந்த புத்தி உள்ளவர்களும் இருக்கின்றார்கள். இதி;ல் பிறப்பால் விஷேட தேவையுடையோர் அல்லாமல் கோரமான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விஷேட தேவையுடையோரும் பலர் உள்ளனர்.

இவர்கள் உடல் உள ரீதியாக பல் வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களில் பலர் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு வீட்டினுள் படுத்த படுக்கையாக முடங்கியும் கிடக்கின்றனர். இவ்வாறான விஷேட தேவையுடையோரை இனம் கண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களை உள ரீதியாக மேம்படுத்துவதற்காக அரசும் கிழக்கு மாகாண சபையும், எமது அமைச்சும் எமது திணைக்களமும் மற்றும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு வேலைத்திட்டங்களை மு;னனெடுத்து வருகின்றது.

எமது திணைக்களத்தினால் விஷேட தேவையுடையோருக்கான இல்லங்களாக அம்பாறை மாவட்டத்தில் இரண்டும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கும், திருகோணமலை மாவட்டத்தல் இரண்டுமாக 8 இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன.

வீட்டினுள் முடங்கி கிடக்கும் விஷேட தேவையுடையோரை வெளிக்கொணர்ந்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த ஆக்கமும் ஊக்கமும் வழங்கி அவர்களுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து மாற்றுத்திறனாளிகளை மாற்றத்தை நோக்கி மாற்றியமைக்கின்ற ஒரு நிகழ்வாக இந்த ந்த தமிழ் பரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை பார்க்கலாம்.

இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் இருந்தும் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த விஷேட தேவையுடையோர் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்கள் என்றார்.

 

Thanks

kattankudy info