வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை: விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

அரசாங்கம் நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாவட்ட அடிப்படையில் பயிற்சியளித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
 
அரசாங்கம் அதற்கான விண்ணப்பங்களை தற்போது  கோரியுள்ளது.
 
தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு இவ்விண்ணப்பத்தைக்கோரியுள்ளது.
 
அரசதுறையில் அல்லது தனியார் துறையில் இதுவரை ஏதேனும் சேவையில் (தொழில்) இணைந்திராத பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கமுடியும்.
 
விண்ணப்ப முடிவுத்திகதி 08.09.2017 ஆகும். 
 
21-35வரை வயதுள்ள ஆண்பெண் இருபாலாரும் தீவில் எந்தப்பகுதியிலும் பணியாற்றக்கூடியதாக உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
 
தெரிவாகும் பட்டதாரிகளுக்கு ஒருவருட பயிற்சி வழங்கப்படும் .பயிற்சி நடைபெறும் காலகட்டங்களில் மாதமொன்றுக்கு 20ஆயிரம் ருபா மட்டும் கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளர்.
 

விண்ணப்பங்களுக்கும் தகவல்களுக்கும்  www.mnpea.gov.lk என்ற இணையத்தளத்தைப்பார்க்கவும். இவ்வலைத்தளத்தினூடாக விண்ணப்பிக்கின்ற பட்டதாரிகள் விண்ணப்பங்களை பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சொன்னார்.