பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற தாந்தாமலை முருகன் தீர்த்தோற்சவம்.

 

(படுவான் பாலகன்)  கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமாக போற்றப்படுகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று(07) இடம்பெற்றது.
17.07.2017ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய உற்சவத்தில், தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வந்தநிலையில், இறுதிநாள் திருவிழா முனைக்காடு மக்களினால் நேற்று(06) ஞாயிற்றுக்கிழமை இரவு நடாத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 06மணிக்கு தீர்த்தோற்சவமும் நடைபெற்றது.
இதில், நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.