காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை கோரினார் ஆளுநர்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விவரங்களை சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அதன் பின்னர் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், கிழக்கு ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், 156 நாட்களைக் கடந்துள்ளது.

எனினும், தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வை பெற்றுக்கொடுக்காத நிலையில், கிழக்கு ஆளுநரிடம் நேற்று (04) மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

மகஜரைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.