உதயம் விழ்ப்புணர்வற்றோர் சங்கத்துக்கு அஹிம்சாவினால் நிதியுதவி

அறுபத்து நான்கு உறுப்பினர்களைக் கொண்டு மட்டக்களப்பில் இயங்கி வரும் ‘உதயம் விழ்ப்புணர்வற்றோர் சங்க’ உறுப்பினர்களின் 3 நேர உணவுச் செலவை ஈடு செய்யுமுகமாக அஹிம்சா நிறுவனம் 03.08.2017 அன்று ரூபா 13,500 பெறுமதியான காசோலையை வழங்கி வைத்தது.

அகிம்சா நிறுவனத்தின் ஆலோசகரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவருமான த.வசந்தராஜா காசோலையை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் அஹிம்சா நிறுவனத் தலைவர் வி.விஜயராஜா உதயம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர், நிர்வாக உத்தியோகத்தர் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இரக்க சிந்தை உள்ளோரின் உதவியுடனேயே இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. நிரந்தர வருமானமின்றி மிகவும் பிரயத்தனத்துடன் இயங்கி வரும் இவ்வமைப்பானது தங்களது பார்வையற்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவம் சொந்த தொழில் ஒன்றினைப் பயின்று எதிர்காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை அவரவரே நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தற்போது 20 பேருக்கான விளக்குமாறு செய்யும் பயிற்சியை இவ்வமைப்பு அளித்து வருகின்றது. இவ்வமைப்பின் நிர்வாகிகளுங்கூட பார்வையற்றவர்களேயாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்