கச்சக்கொடியில் பாலம் மற்றும் வீதி மக்கள் பாவனைக்கு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட, கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம் மற்றும் கொங்கிறீட் வீதி திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று(04) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
பின்தங்கியதும், தனித்துவிடப்பட்டதுமான கிராமங்களினை அபிவிருத்தி செய்யும் கிழக்கு மாகாணசபையின் திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட பாலம் மற்றும் கொங்கிறீட் வீதியே மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டன.
5.5மில்லியன் செலவில் இவை அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.