கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி விரதம்.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், வரலட்சுமி விரதம் நேற்று(04) வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை ஆராதனைகளில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.
விரதத்தினை அனுஸ்டித்த அடியார்கள் அனைவரும் நிறைகுடம், விளக்கு என்பன ஏற்றி பூசை நிறைவுற்றதும் அவற்றினை வீட்டுக் கொண்டு சென்றனர். மேலும் பூசையின் இறுதியில் காப்பும் அணிந்து கொண்டனர்.
வருடாந்தம், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி விரதம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

விஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லட்சமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்கஇ உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டி கின்றனர். லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்துஇ அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.

ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல்இ அவரது நல்வாழ்வே பெரிதென கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும்இ தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மகாலட்சுமியை தனலட்சுமிஇ தான்யலட்சுமிஇ தைரியலட்சுமிஇ ஜெயலட்சுமிஇ வீரலட்சுமிஇ சந்தானலட்சுமிஇ கஜலட்சுமிஇ வித்யாலட்சுமி என எட்டு அஷ்ட லட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.

லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம்இ அழகுஇ வெட்கம்இ அன்புஇ புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். ஆடி மாத பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக் கிழமையில் அதாவது இன்றுய தினம் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப் படுகிறது. சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதை செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.