தமிழ்தேசிய கூட்டமைப்பினை உடைக்கும் நோக்கமோ? பிரதமரின் அறிவிக்காத வருகை – ஆருடம் கூறுகிறார் ச.வியாழேந்திரன்

கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மக்கள் பிரதிநிதிகளை அழைத்து எந்தவிதமான அபிவிருத்தி பற்றியும் கலந்தாலோசிக்கவில்லை  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஏறாவுர் சவுக்கடி ஜோசெப்வாஸ் பாடசாலையின் பரிசளிப்பு விழா புதன்கிழமை 02.08.2017 இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் அந்த அமைச்சருடைய  செயலாளர் தனது அலுவகத்தில் இருந்து தொடர்பு கொண்டு எங்களுடைய அமைச்சர் வருகிறார் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என அறிவித்தில் வரும். இதுதான் வழமை.
ஆனால் பிரதமர் மட்டக்களப்புக்கு வரும்போது எந்த விதமான அறிவித்தலும் எங்களுக்கு வரவில்லை.
அபிவிருத்தி சம்மந்தமாக அரச அதிகாரிகளையும், முதவமைச்சரையும் ஆளுநரையும் அழைத்து வந்து பேசியிருக்கிறார். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவில்லை. இவ்வாரான செயற்பாட்டை நாம் வேதனையோடு நோக்குகின்றோம்.
இது ஒருவேளை மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்த அரசாங்கம் ஒருவேளை உடைப்பதற்குரிய  முயற்சிகளை இவர்கள் மேற்கொள்கிறார்ளோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.
முதலமைச்சர் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கவில்லை.
இந்த நல்லாட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய இன நல்லினக்கத்தை மத நல்லினக்கத்தை சகோதரத்துவத்தை பேச்சளவில்தான் காட்டிக் கொன்டிருக்கின்றார்கள் என்பது தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள்  இன மத நல்லிணக்கத்தை பேச்சளவில் மட்டுமல்ல செயற்பாட்டிலும் காட்டியிருக்கிறோம்” என்றார்.