பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பங்கேற்கும் தாந்தாமலை ஸ்ரீ முருகனின் தீர்த்தோற்சவம் இன்னும் சிலநாட்களில்.

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும். சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 17.07.2017ம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அன்றிலிருந்து, இன்றுவரை ஒவ்வொரு கிராம மக்களின் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத்தின் இறுதிநாள் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 07.08.2017ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை இடம்பெறவிருக்கின்றது.
திருவிழாவினை காண்பதற்காக நாட்டின் பலபாகங்களிலும் இருந்து, மக்கள் வருகைதந்து சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் பாதயாத்திரையாகவும் பல அடியார்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
அடியார்களுக்காக வீதிகளில் தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டு, வழங்கப்படுகின்றன. மேலும் ஆலயத்தில் தாந்தாமலை ஸ்ரீ முருகன் அன்னதானசபையினரால் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.