தமிழரசுக் கட்சியை தவிர்த்து கூட்டு கட்சிகள் இரகசிய சந்திப்பு

தமிழ்த்​ தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், தமிழரசுக் கட்சியை தவிர்த்து, ஏனைய கட்சிகள் இணைந்து இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளன.

 

வவுனியாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றிலேயே இந்த சந்திப்பு, நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

புளொட், டெலோ மற்றும் ஈபி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளே இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த சில தினங்களாக வட மாகாண சபையின் சுழற்சி முறையிலான ஆசனம் தமிழரசுக் கட்சியினருக்கு வழங்கப்பட் நிலையில் ஏனைய மூன்று கட்சிகளும் தமிழரசுக் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையிலே​யே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

tamilmirror