அனைத்துபட்டதாரிகளையும் உள்வாங்கும்வரை எமது குரல் ஓயாது!

 
(காரைதீவு  நிருபர் சகா)
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரகப்போராட்டம் செவ்வாய்க்கிழமை 156வது நாளுடன் நிறைவுக்குவந்தது.
ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கோரியிருந்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்குகொண்டுவந்தனர்.
நேற்றைய தினம் பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அங்கு பட்டதாரிகள் சங்கத்தலைவர் எம்.நசுறுதீன் பேசுகையில்:
கடந்த 156நாட்களாக அதாவது  5மாதங்கள் 6நாட்களாக பலத்த கஸ்ட்டங்கள் துன்பங்கள் மனக்கசப்கபுளுக்கு மத்தியில் இரவுபகல் பாராமல் தொடர் போராட்டத்தை நடாத்திவந்தோம்.
அதற்கு இன்று ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது.எனினும் இது பூரணவெற்றியல்ல. அனைத்து பட்டதாரிகளையும் உள்வாங்கும்வரை எமது குரல் தெடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
இடைப்பட்ட காலங்களில் பலர் விமர்சனம் செய்தார்கள்.வெளியேயிருந்த பட்டதாரிகளும் சரி ஏனையோரும் சரி. அவற்றையெல்லாம் தாண்டி எமது போராட்டம் வடக்க கிழக்கில் ஏனையோர்   நிறுத்தியிருந்தபோதிலும்கூட நாம் தொடர்ந்தோம்.
இன்று எங்களால் அவர்களும் பயன்படப்போகின்றார்கள். எல்லாப்பகழும் இறைவனுக்கே.
தீர்வுகள்!
மத்தியஅரசின் கடந்த 7ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி 20ஆயிரம் பட்டதாரிகளுக்கு மாதமொன்றுக்கு 20ஆயிரம் ருபா வீதம் வழங்கி ஒருவருட பயிற்சியின்பின்னர் தொழிலைவழங்குவதென்பது. அது அநேகமாக ஜனவரியில்தான் சாத்தியமாகும்.
அடுத்தது கிழக்கு மாமாணசபையின் முடிவு. நேற்று மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு பட்டதாரிகளை ஆசிரியர்களாக உட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இதில் சில பாடங்கள்விடுபட்டிருப்பது வேதனைக்குரியது. இந்தநாகரீகம் இஸ்லாமியநாகரீகம் கிறிஸ்தவநாகரீகம் பொருளியல் அரசியல்விஞ்ஞானம் போன்ற பாடத்துறைகள் விடுபட்டிருக்கிறது.அவர்களில் சிலர் அப்பாடத்தில் விசேடநிபுணத்துவம் பெற்றவர்களுமுள்ளனர்.
எனவே அவர்களது பாடங்களுக்கும் விண்ணப்பம் கோரப்படவேண்டும்.
மேலும் ஒரு போட்டிப்பரீட்சையொன்று இருக்கிறது. கனத்த வலிகளோடு ஒரு வலியாக அந்தப்பரீட்சையையும் எதிர்கொண்டு நிச்சயம் சித்திபெற்று அனைவரும் ஆசிரியராக உள்வாங்கப்படவேண்டும் என இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்.
இதுவரை எமக்குதவிய ஊடகவியலாளர்கள் இந்தக்காணியைத்தந்த காரைதீவு அன்பர் மின்சாரம் தந்துதவிய இ.மி.சபை பாதுகாப்புவழங்கிய பொலிசார் பிரதேசசபை மற்றும் பல உதவிகளை நல்கிய தனவந்தர்கள் எனப்பலருக்கும் இந்தசந்தர்ப்பத்தில் நன்றிகூறுகின்றோம். என்றார்.
மற்றுமொரு தலைவர் எஸ்.திலிபன் பேசுகையில்:
5மாதங்களைத்தாண்டி இன்று எமது போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கின்றோம். இந்தவேளையில் இவ்வளவுகாலமும் இங்கிருக்கின்ற சந்தர்ப்பங்களில் ஏதாவது இடர்பாடுகள் கஸ்ட்டங்கள் ஏற்பட்டிருக்கும். எனவே அவற்றை மறந்து புதுயுகம் நோக்கி பயணிப்போம்.
மத்தியஅரசு வழங்கவிருக்கும் 20ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சி குறைக்கப்படவிருப்பதாக அறிகின்றோம்.முடியுமானவரை அனைவரையும் உள்ளீர்த்து சகலபாடநெறிகளையும் உள்ளீர்த்து தொழில்வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றோம். கிழக்குமாகாண அரசும் விடுபட்ட பாடங்களை சேர்த்து அவர்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களும் எம்முடன் போராட்டத்திலீடுபட்டவர்களாவர். அவர்களை நாம்கைவிடமுடியாது. எனவே அவர்களையும் சேர்க்கவேண்டும். இதுவரைகாலமும் எமக்குதவிய ஊடகவியலாளர்கள் முதல் சகல பரோபகாரிகளுக்கும் நன்றிகள்.என்றார்.
அனைவரும் பகற்போசனம் உண்டு அவ்விடத்தைவிட்டு கலைந்துசென்றனர்.