தெய்வேந்திரன் அபிட்சன் தேசியமட்ட கணித ஒலும்பியாட் குழுமத்திற்கு தெரிவு

 (பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன்  தெய்வேந்திரன் அபிட்சன் தேசியமட்ட கணித ஒலும்பியாட் குழுமத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த அபிட்சன் தரம் 06 இல் கல்வி கற்று வருகின்றார்.
சென்றமுறை தரம் ஐந்து புலமைப்பரிசீல் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனாவான்.
        தேசிய மட்டத்திலான கணித ஓலும்யியாட் குழுமத்திற்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பரீட்சை அண்மையில் கொழும்பில் நடைபெற்றிருந்தது. இப்பரீட்சைக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் காணித பாடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  தோற்றியிருந்த நிலையில் இம் மாணவன் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக சித்தியடைந்துள்ளார்.