நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை – இன்று முதல் இலவச வைத்திய சேவை

மாலபே டொக்டர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை பொதுமக்களுக்கான இலவச சிகிச்சைக்காக இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

வெளிநோயாளர் சிகிச்சை, நோயாளர்களை உள்ளீர்த்தல் போன்ற நடவடிக்கைகள் இன்று முதல் இடம்பெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

 

இவ் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் தலைவராக டொக்டர் அஜித் மென்டிஸ் பணியாற்றுகிறார்.

 

சிகிச்சைகளும் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதுடன், வைத்தியர்கள் உள்ளிட்ட ஆளணிகளை இணைத்துக் கொள்வதற்காக திறைசேரியின் முகாமைத்துவத்தின் அங்கீகாரமும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

புதிய வைத்தியர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை பணிப்பாளர் சபை ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. போதிய வைத்தியர்கள் இல்லாவிட்டால், சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்தியர்களின் சேவைகளை பெற்றுக் கொள்ளவும் பணிப்பாளர் சபைக்கு அதிகாரம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.