காஞ்சிரங்குடாவில் விபத்து – ஒருவர் பலி

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதான வீதியின் தேவிலாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(31) மாலை இடம்பெற்றுள்ளது.

மணற்பிட்டி பகுதியில் இருந்து கொத்தியாபுலைநோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், தமது கட்டுப்பாட்டை மீறி வீதியில் சறுக்கி விழுந்தமையினாலையே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில், தெய்வநாயகம் சிவப்பிரகாசம் (வயது 55)  என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த நிலையில், இருவரும் பலத்த காயங்களுக்குள் உள்ளாகி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.