முனைப்பினால் பன்சேனை பாடசாலை மாணவர்களுக்கு உதவி

(படுவான் பாலகன்)மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலயத்தினைச் சேர்ந்த, கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் வெற்றீட்டிய மாணவர்களுக்கு முனைப்பு நிறுவனத்தினால் நேற்று(31) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண மட்டத்தில் மூன்று போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள பா.வசந்தினி, கஜேந்தினி போன்ற மாணவர்களுக்கு பாதணிகளும், உதைபந்தாட்டம், அஞ்சல் போன்றவற்றில் மாகாணமட்டத்தில் தெரிவாகி தேசியமட்டத்திற்கு செல்லவுள்ள மாணவர்களின் உடல்தாங்கு திறனை அதிகரிக்கும் வகையில், விளையாட்டுப்பயிற்சியின் போது, காலை உணவு வழங்குவதற்காக ஒரு தொகை பணமும் வழங்கிவைக்கப்பட்டன.
இதனை முனைப்பு நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் மா.சசிகுமார், செயலாளர் இ.குகநாதன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
முனைப்பு நிறுனமானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும்மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டு, வாழ்வாதார உதவிகளையும், கல்விக்கான உதவிகள் மற்றும் மரணச்செலவுகள் போன்றவற்றிற்காகவும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.