பல பிரதேசங்களில் அடைமழை – மண்சரிவு அபாயம்

இரத்தினபுரி, காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
குறிப்பாக குருவிற்ற, எரத்ன, அடவிகந்த, தெவிபஹல, அதிரியவெல, சுதாகல, கீரகல, தந்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் நிலவுகின்றன. அபாயம் நிலவும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு இது பற்றி முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றிரவு நாட்டின் பல பாகங்களில் அடைமழை பெய்துள்ளது.
தென் மாகாணத்தில் மாத்திரமன்றி கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் சில இடங்களில் அடைமடை பெய்திருக்கிறது. சில இடங்களில் 75 மில்லி மீற்றரைத் தாண்டிய மழை வீழ்ச்சி பதிவாகியிருக்கிறது.