இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அற்புதமிக்க வேள்வி

(படுவான் பாலகன்)  இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ ஸ்;வர்ண கால பைரவ வேள்வி, எதிர்வரும் ஆகஸ்ட்மாதம் 17,18ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
உலக சுபீட்சத்திற்காகவும், இலங்கை வாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும், நாட்டில் ஏற்பட்ட அகால மரணங்களினால் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும், அவைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட தோச நிவர்த்திக்காகவும் இவ்வேள்வி செய்யப்படவுள்ளது.
கொல்லிமலை சித்தர், மஹா பைரவ உபாசகர் காகபுசுண்டர் தருமலிங்க சுவாமிகள் தலைமையிலுள்ள, மஹா அஸ்ட பைரவ உபாசகர்கள், யோகிகள், கேரள சாஸ்திர வேத விற்பன்னர்களான நம்பூதிரிகள் சித்தமுறைப்படி இவ்வேள்வியை நடாத்தவுள்ளனர்.
முதன்முறையாக இலங்கை, இந்தியாவில் பல சித்த வனங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அ+பூர்வமான 10008 காயகல்ப மூலிகைகளை கொண்டு வேள்வி நடைபெறவுள்ளது.
இவ்வேள்வியில் அனைத்து சிவனடியார்களும் கலந்து கொள்ளுமாறு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையினர் அழைப்பு விடுக்கின்றனர்.