வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைப்பதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை இலங்கை ஆசிரியசேவையில் மாவட்ட அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல பாடங்களுக்கு இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினை வதிவிடமாக கொண்ட 18வயது தொடக்கம் 40வயது வரையான வேலையற்றபட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத்திகதி 2017.08.21எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.