ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு ஆயத்தம்

வௌிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவிற்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக சிலொன் டுடே பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மூன்று அமைச்சர்கள் வீதம் தம்முடன் கலந்துரையாடியதாக சிலோன் டுடே பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பிரதமரிடன் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாவும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.