மைத்திரி-மஹிந்த இணைவு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் சந்தித்து, ஒன்றிணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றதா என்பது தொடர்பாகக் கலந்துரையாடுமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தில் இருப்பது என்பது, சு.கவுக்கு மிகுந்த கடினமாக இருப்பதாக, சு.கவின் உறுப்பினரும் தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சருமான, ஜோன் செனவிரட்ண கூறியுள்ளார்.

எனவே, சு.கவில், மேலும் பிளவுகளைத் தடுக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுமாறு, ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தில், எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரை இருக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எனினும், அது வரை காத்திருப்பதற்கு, சு.கவால் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்காவிடின், சு.கவில் நிச்சயம் பிளவு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கு இடையேயான ஒப்பந்தம், ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilmirror