சு.க. வெளியேறினால் ஐ.தே.க. தனித்து ஆட்சி

கூட்டு அர­சி­லி­ருந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி வெளி­யே­றி­னால், ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்சி அமைக்­கும் என்று தெரி­வித்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­சர் நிமல் சிறி­பா­லடி சில்வா, மைத்­தி­ரி­பா­ல­வின் வெற்­றிக்­காக நாம் பாடு­ப­டா­த­போ­தும் அவர் எம்மை உதைத்­துத் தள்­ளா­மல் வைத்­தி­ருக்­கின்ற யதார்த்­தத்­தை­யும் உணர்ந்து கொள்­ள­வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள் ள்­ளார்.

பது­ளை­யில் நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தொகு­திக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மைய செயற்­குழு கூடி அர­சி­லி­ருந்து நாளை வெளி­யே­ற­வேண்­டும் எனத் தீர்­மா­னம் எடுத்­தால், அதற்­குத் தலை­வ­ணங்க நாம் தயா­ராக உள்­ளோம்.

கடந்த அரச தலை­வர் தேர்­த­லின் பின்­னர், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நினைத்திருந்­தால், எம்­மைக் காலால் உதைத்துக் கட்­சி­யி­லி­ருந்­தும் அர­சி­லி­ருந்­தும் விரட்­டி ­யி­ருக்­க­லாம். ஏனெ­னில், அந்­தத் தேர்­த­லில் நாம் அவ­ருக்­காக உழைக்­க­வில்லை. ஆனால், அவர் அவ்­வாறு செய்­ய­வில்லை.

நாம் யதார்த்­தத்­தைப் புரிந்து கொள்­ள­வேண்­டும். நாம் இன்று கூட்டு அர­சி­லி­ருந்து வெளி­யே­றி­வி­டு­வ­தா­கத் தீர்­மா­னம் எடுத்­தால், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு 106 ஆச­னங்­கள் உள்­ளன. அந்­தக் கட்­சிக்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் ஒட்­டி­யி­ருக்­க­வேண்­டும் என்ற தேவை கிடை­யாது. அந்­தக் கட்சி நினைத்­தால் இன்­னும் தேவை­யான ஏழு ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்டு ஆட்சி அமைத்­தி­ருக்­க­லாம்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை இணைத்­துக் கொண்டு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் ஆட்சி நடத்தி வரு­கின்­றார் – என்­றார்.