எதிர்க்கட்சித் தலைவர் மட்டு. விஜயம்

(எஸ். பாக்கியநாதன் )சுவாமி விபுலானந்தரின் 125ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தின் நடராஜானந்தா நினைவு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 1.30க்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.

அகில இலங்கை இந்துமா மன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.