சிறந்த செயற்பாட்டினால் பாவற்கொடிச்சேனை யுவதி இந்தியா பயணம்

(சசி) மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகத்தின் செயலாளர் செல்வி சிவானந்தம் லக்சனா இந்தியா சென்னைக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பயணமாகியுள்ளார்.

சென்னை வேலுரில் நடைபெறும் இளைஞர் அபிவிருத்தி,மற்றும் அனுபவபகிர்வு தொடர்பான பயிற்சி வேலைத்திட்டங்களில் இவர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர்கழகத்தின் செயலாளராகவும், 2015,2016ம் வருடங்களின் தலைவர் மற்றும் பொருளாளராகவும், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பொருளாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முக்கிய பதவிகளையும் வகித்துக் கொண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை கிராமிய, பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இவர் வழங்கிய ஒத்துழைப்பு, மற்றும் ஈடுபாட்டின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்திற்க்காக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 23.07.2017 அன்று இலங்கையிலிருந்து சென்ற இளைஞர் சேவை அதிகாரிகள்,இளைஞர்கள் என 27பேர் அடங்கிய குழுவில் இளைஞர்கள் சார்பில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் பிரதிநித்துவம் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒன்பது நாட்கள் வேலுரில் தங்கியிருந்து பயிற்சிகள் நிறைவு செய்து தாயகம் திரும்பவுள்ளார்.