மட்டு கச்சேரியை சுற்றுலா மையமாக மாற்ற பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

(க.விஜயரெத்தினம்)  மட்டக்களப்புக்கு விஜயம செய்து, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.
அதனையடுத்து மாவட்ட செயலகம் அமைந்துள்ள டச் கோட்டையைச் சுற்றிப்பார்வையிட்டதுடன் புதிய மாவட்ட செயலக கட்டடம் மற்றும் டச் கோட்டையை சுற்றுலா மையமாக மாற்றுதல் தொடர்பிலும் கலந்துரையாடினார். இவ் வருகையின் போது கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லா கம, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் ஆகியோரும் இணைந்திருந்தனர்.