முல்லைத்தீவு மாவட்ட அன்னாசி அறுவடை வயல் விழா

சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட  அன்னாசி அறுவடை வயல் விழா நேற்று புதுகுடியிருப்பு திம்பிலிப்பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ அற்புதச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம பிரதீபன் மாகாண விவசாய பணிப்பாளர் சி சிவகுமார் மேலதிக பணிப்பாளர் ஆராட்சி கலாநிதி சி ஜே அரசகேசரி கிராம அலுவலர் பயனாளிகலென பலரும் கலந்து கொண்டனர்

 

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016 ம் ஆண்டு 78 பயனாளிகளுக்கு அன்னாசி செய்கைக்காக நாற்றுகள் வழங்கப்பட்டு சிறப்புற செய்கை மேற்கொண்ட விவசாயிகளில் ஒருவருடைய வீட்டிலேயே இவ் அறுவடை சிறப்புற இடம்பெற்றதோடு அன்னாசி செய்கை தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது

 

2017 ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் 30 பயனாளிகளுக்கு அன்னாசி செய்கைக்கான உதவிகள் வழங்கவுள்ளதாக  முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.