வட மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள்: சுமார் 1500 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

வட மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்காக விண்ணப்பித்த 1500 ற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வடமேல் மாகாண அரச சேவை ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பெயர் பட்டியலை அவதானித்த சில பட்டதாரிகள் அதிருப்தி வௌியிட்டிருந்தனர்.

எவ்வித தௌிவான காரணங்களும் இன்றி தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பட்டதாரிகள் தெரிவித்தனர்.

தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்களைத் தௌிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த தமக்கு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.