சர்வதேச ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் உப தலைவர் கொக்கட்டிச்சோலைக்கு வருகை

(படுவான் பாலகன்)  இலங்கை வந்துள்ள சர்வதேச ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் உப தலைவர் சுவாமி கௌதமானந்தா ஜீ மகராஜ்  வியாழக்கிழமை (27)காலை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் போது, ஆலய முன்றலில் வைத்து சுவாமிக்கு மாலை அணிவித்து கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலய மாணவர்கள், அதிபர்,ஆசிரியர்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை வந்துள்ள சுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாமிகளுடன் இலங்கை இராமகிருஸ்ணமிஷன் தலைவர், மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.