வேககட்டுப்பாட்டை இழந்ததால் 35 பேர் பாதிப்பு.

 அம்பாரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று நேற்று (26) அதிகாலை கதிர்காமம் இருந்து வாழைச்சேனை நோக்கி வந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேரூந்து சம்மாந்துறையூடாக மல்வத்தை பிரதான வீதியில் பயணித்திருந்டத போதே வேககட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலைவேளை ஏற்பட்ட இவ்விபத்தில் 35ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.