கிழக்கு மாகான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு

எஸ்.பாக்கியநாதன்
கிழக்கு மாகான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தனது 36 வருட கால பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரிற்கு பிரியாவிடை செலுத்தும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (25) மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பொலிசாரினால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சேவையைப் பாராட்டி வாழ்த்துப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சி, அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவான் வெதசிங்க, மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், மதத் தலைவர்கள், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் குடும்பத்தினர் உட்படப்; பலர் கலந்து கொண்டனர்.