ஆடிப்புரப் பெருவிழாவை முன்னிட்டு பாற்குடப் பவனி

எஸ்.பாக்கியநாதன்
ஆடிப்புரப் பெருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட பாற்குடப் பவனி  புதன்கிழமை (26) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த பாற்குடப் பவனி கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு- திருமலை பிரதான விதி வழியாக மங்கள வாத்தியங்கள முழங்க பாரம்பரிய பறை மேளம் மற்றும் தமிழ் கலாசார நிகழ்வுகளோடு பவனியாக ஆலயம் வரை சென்றது.

ஆலயவளாகத்திற்குள் சென்றதும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றதோடு இன்று (26) மாலை 4.00 மணியளவில் ஸ்நாபன பூஜை, பூர்மா கர்மம், திருவிளக்கு பூஜை, சுவாமி உள்வீதி வலம் வருதல் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.