கட்சி பேதமின்றி தமிழ் முதலமைச்சரை கொண்டு வருவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

(பழுவூரான்)
“கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சரை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என இரா.சாணக்கியன் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக தனது அலுவலகத்தில் வைத்து வினவிய போது இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசியல் நிலையை பாத்த்தோமாக இருந்தால் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர் பிரதேசங்களில் பெருவாரியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெறும் என்பது யதார்த்தம். இம்முறை கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பில் இருந்து முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெறுவதற்கு மக்களிடையே வாக்களித்தல் விடயத்தினை விழிப்புணர்வூட்டுவதன் மூலம் வாக்களிப்பு வீதத்த்pனை அதிகரிக்க வேண்டும்.. தமிழ் மக்கள் வாக்களித்தால் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதில் எந்தவிதமான தடையும் இருக்காது.

 

தற்போதைய நிலையில் ஆளுங்கட்சியில் இருந்து ஒருவர் முதலமைச்சர் வருவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவு. ஆகவே எமது இனத்திற்காக தமிழ் தலைமைகள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இணைந்து தமிழ் முதலமைச்சரை உருவாக்குவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். என தெரிவித்தார்,
மேலும் தற்போது என்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் எனது கௌரவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சில புகைப்படங்களை பதிவேற்றுகின்றனர். இதற்கு காரணம் நான் எதிர்வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்கின்ற அச்சமாகவும் இருக்கலாம். நூன் இம்முறை மாகாண சபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் கூறிக்கொள்கின்றேன். ஏன்னைப்பற்றி விமர்சிப்பவர்கள் அதனை விடுத்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஒரு தமிழ் முதலமைச்சரை கொண்டுவருவதற்கு ஆதிக்கம் செலுத்தினால் இன்னும் நன்மை பயக்கும் என மேலும் தெரிவித்தார்.