டெங்கு நுளம்பு ஒழிப்பு பணிக்கு மேலும் 1000பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவக்கைக்கு மேலும் 1000 பேர் இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தலைமையிலான மாகாண சுகாதார அமைச்சர்களின் மாகாநாட்டில் டெங்கு நோயளர்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் டெங்கு நுளம்புகளை இல்லாதொழிக்கும் பணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 500 உதவியாளர்களுக்கு அமைவாக ஏனைய மாவட்டங்களிலும் ஆயிரம் உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான சம்பளம் 22ஆயிரத்து 500ரூபாவாகும். பணியாற்றும்போது மேலதிக நாட்டிகளில் 500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.