பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வினியோகம்

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வினியோகம்
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மாலையர்கட்டு கிராமத்தில் ஆரம்பப்பாடசாலை மட்டுமே உள்ளது.
இடைநிலைக் கல்வியைப் பெற வேண்டிய சிறுவர்கள் மாலையர்கட்டிலிருந்து சின்னவத்தையில் உள்ள இடைநிலைப் பாடசாலைக்கு செல்ல வேண்டியவர்களாக உள்ளனர். இப்பகுதியில் பாதுகாப்பான போக்கு வரத்து வசதிகள் இல்லை.
மாலையர் கட்டிலிருந்து சின்னவத்தைக்கு செல்ல வேண்டிய 15-20 சிறுவர்கள் போக்கிலும், வரத்திலும் தினமும் 8 கி.மீ.தூரத்தை நடந்தே செல்ல வேண்டியவர்களாக உள்ளனர்.
இச்சிறுவர்களில் சின்னவத்தை பாடசாலையினால் சிபார்சு செய்யப்பட்ட 3 சிறார்களுக்கு 22.07.2017 அன்று அஹிம்சா நிறுவனமும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் மக்கள் சக்தி அமைப்பும் இணைந்து துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தன.

இந்நிகழ்வில் அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா, நிர்வாக உறுப்பினர்கள சா. மதிசுதன், க.விஷ்வநாத், அஹிம்சா நிறுவன ஆலோசகரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் தலைவருமான த.வசந்தராஜா, மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் எஸ். ஏகலைவன், செயலாளர் வ.சக்திவேல், சின்னவத்தை பாடசாலை ஆசிரியர் ஞானசேகரம் மற்றும் பயனாளிகளின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்