மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபகிஸ்கரிப்பு

எஸ்.பாக்கியநாதன்
பிரத்தியேக மருத்துவக் கல்லூரி சயிட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மருத்துவ சங்கத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள்  செவ்வாய்க்கிழமை (25) பணிப்பகிஷ;கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, மாதாந்த மருத்துவப் பரிசோதனைக்குரிய கிளினிக்குகளுக்கான சிகிட்சைகள் இடம்பெறவில்லை.
இதனால் தூர இடங்களிலிருந்து சிகிட்சைக்காக வந்த நோயாளிகள் சிகிட்சை பெறாது ஏமாற்றத்ததுடன் திரும்பினர் ஆனால் டெங்கு தொற்று அதிகரித்துள்ள நிலையில் காய்ச்சல் தொடர்ச்சியாக உள்ள நோயாளிகளின் இரத்தப்பரிசோதனைகள் இடம்பெற்று சிகிட்சையளிக்கப்பட்து.
எனினும் இன்று காலை 8.00 மணிவரை வழமையான சிகிட்சைகள் இடம்பெற்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள தெரிவித்தன.