கண்ணபுரம் நாராயணன் அறநெறி பாடசாலைக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் கண்ணபுரம் நாராயணன் அறநெறி பாடசாலைக்கு இசைக்கருவிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) வழங்கி வைக்கப்பட்டன.

 

 

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.