அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு- ஆற்றில் குதித்து பலியான இளைஞனின் மரணத்தில் சந்தேகம்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கரடியனாறு முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது ஆற்றில் குதித்து இளைஞனொருன் பலியான சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த வேளை மரண விசாரணையின் நிமிர்த்தம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம் றிஸ்வி திங்கட்கிழமை (24) இரவு வருகைதந்து பார்வையிட்டார் அவ்வேளை நீதிபதியிடம் இளைஞனின் உறவினர்கள் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினர்..

முந்தன்குடமாரவெளி ஆற்றில் மணல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்காக விஷேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கபட்டன. அவ்வேளை அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிய வேளை தசாகரன் மதுஷன் என்ற 17 வயது இளைஞன் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கி பலியானார் இது தொடர்பான மரணவிசணையின் நிமிர்த்தம் வருகை வந்த நீதிபதியிடம் எமது எமது பிள்ளைகள் சட்டத்திற்கு முறனாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தால் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் நீதிமன்றம் மூலம் தண்டணை வழங்கலாம். துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த மகனை அங்கிருந்த சாரதி மற்றும் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் காப்பாற்ற முயற்சித்த வேளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். காப்பாற்ற முயற்சித்தவர்களை தடுக்காமல் விட்டிருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. தெய்வாதினமாக ஒரு மகன்; காப்பாற்றப்பட்டுள்ளார்.

எமது பிள்ளளைகள் சட்டத்திற்கு முறனாக மணல் அகழ்வில் ஈடுபடவில்லை. மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேர எல்லைக்குள்தான் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

நாங்கள் மதியம் மூன்று மணி முதல் உங்களை சந்தித்து உண்மை நிலவரத்தை கூறுவதற்காக வீதியில் காத்திருந்தோம். பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலைத்துவிட்டார்கள்.

கடந்த மாதம் கித்துள் பகுதியில் இதேபோன்று விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பயந்து ஆற்றில் குதித்த ஒருவர் பலியாகிருந்தார். அதற்கு நாங்கள் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாவே தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என கூறினர்.

குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை எதிர்வரும் அகஸ்ட் 02 ஆந் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நடைபெறும் அன்றைய தினம் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூட இருந்தவர்கள் என அனைத்து சாட்சிகளையும் நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம் றிஸ்வி கூறியதுடன் பிரேத பரிசோதனை நடத்துவதற்கும் உத்தரவிட்டார்.

இதேவேளை திங்கட்கிழமை (24) இதேவேளை துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்திற்கு நீதிகோரி மாலை 4 மணி தொடக்கம் பொதுமக்கள் வீதியில் போராட்டம் நடத்தினர் பொலிஸ் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை நீதிபதி விசாரணை தேவை என அவர்களால் போராட்டம் முன்னெடுக்கபட்டது. பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான போராட்டம் இரவு 9 மணிவரை நீடித்துக்கொண்டிருந்த வேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் பொலிஸாருக்கு ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொண்டதால் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது இதையடுத்து கண்ணீர்புகை மற்றும் தடியடி நடத்தி போராட்டம் கலைக்கப்பட்டது.