திக்கோடை ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார உட்கட்டமைப்புக்கான அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் திக்கோடை பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள ஆரம்ப வைத்திய பராமரிப்புப் பிரிவிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மாகண சபைப் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான இரர. துரைரெட்ணம், கோவிந்தன் கருணாகரம், ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, மார்க்கண்டு நடராசா மற்றும் வைத்திய அலுவலகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொணடனர்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதார உட்கட்டமைப்புக்கான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 08 மில்லியன் ரூபா பெறுமதியில் திக்கோடை பிரதேசத்தில் மேற்படி ஆரம்ப வைத்திய பராமரிப்புப் பிரிவிற்கான கட்டிடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.