மக்கள் வசிக்கும் இடங்களை அடையாளம் கண்ட பின்னரே எல்லைக்கல்லிட வேண்டும்- மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு


வனவளத்துறை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி மக்களது, மக்கள் வசிக்கும் இடங்களை அடையாளம் கண்ட பின்னரே எல்லைக்கல்லிடல் நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. .
திங்கட்கிழமை (24) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்,  பாராளுமன்ற உறுப்பினர்  ஜீ.சிறிநேசன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது வன இலாகாவினர் மக்கள் வாழும் இடங்களிலும் தங்களது எல்லைக்கற்களை இட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக்,
எங்கெங்குசிறிய காடு இருக்கிறதோ அங்கு சென்று தங்களுடைய எல்ல என்று அடையாளமிடுகிற செயற்பாடு வன இலாகாவினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் குடியேறும்வரையில் அந்தப்பிரதேசத்திற்குச் செல்வதே இல்லை ஆனால் மக்கள் குடியேறியவுடன் எல்லையிடுகிறார்கள். சென்ற மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த எல்லையிடல் எந்த அடிப்படையில் நடைபெறுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு , மக்கள் வசிக்கும் இடங்களில் எல்லைக்கல்லிடுவதில்லை. ஏற்கனவே போடப்பட்டவைகள் மீள அமைப்புச் செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்பொழுது இந்தக்காலப்பகுதியில், அடையாளம் காணப்பட்ட இடங்களில் எல்லையிடுகிறோம். அங்கு ஏற்படும் பிரச்சினைகளைச் சுமுகமாக முன்னெடுக்கிறோம் என வனவளத்துறை அதிகாரி ஒருவர் பதிலளித்தார்.
அதே நேரம் இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம்,
மக்கள் இருக்கும் இடங்களுக்குள் சிறிய பகுதிகளைக் கூடாமல் கல்லிடப்படுகிறது, அதனால் மக்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே அவற்றினை அவர்கள்திருத்திக் கொள்ளவேண்டும். அத்துடன். அவ்வாறான இடங்களை அடையாளப்படுத்துவதற்கும் முடியும். எனவே இவற்றினைத்டதிருத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இத்த விடயம் குறித்து ஆராய்ந்த மாவட்ட அபிவிருத்திக்குழு, பிரதேச செயலாளர்களின் ஊடாக இந்த விடயத்தினை வன இலாகா கையாளவேண்டும். இனிவரும் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் செயற்படவேண்டும் என்றும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இதன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.