அகில உலக இராமகிருமிசனின் உதவித் தலைவர் மட்டக்களப்பு விஜயம்

0
858

எஸ்.பாக்கியநாதன்

அகில உலக இராமகிருஷ;ண மடம் மற்றும் ராமகிருஷ;ணமிசனின் உதவித் தலைவரும், சென்னை இராமகிருஷ;ண மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தாஜீ மகராஜ் இன்று செவ்வாய்க்கிழமை (25) மட்டக்களப்பு விமான நிலையத்தில் வைத்து மாலையணிவித்து வரவேற்கப்பட்டார்..

இந்நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், மாநகர ஆணையாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளார் கே. பாஸ்கரன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எம்.செல்வராஜா உள்ளிட்டோர் மாலையணிவித்து வரவேற்றனர். மட்டக்களப்பு இராமகிருஷ;ணமிசன் தலைவர் பிரபு பிரேமானந்தா மகராஜ் ,கல்லடி இராமகிருஷ;ணமிசன் சுவாமி ஸ்ரீவாசானந்தா சுவாமியை வரவேற்றனர்.

அங்கிருந்து பிரதான வீதி வளியாக கல்லடி மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இருந்து பக்தர்களாலும் கல்லடி சிவானந்தா வித்தியாலய மாணவர்கள் மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள்  சுவாமியை வரவேற்றனர்.

அங்கிருந்து கல்லடி இராமகிருஸஷ;ணமிசன் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.  செல்லும் வழியில் சுவாமி மாணவர்களுக்கும் அடியார்களுக்கும் கையை அசைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.

கல்லடி இராமகிருஷ;ணமிசன் நிர்வாகத்தினரால் வரவேற்றப்பட்ட சுவாமி வணக்க அறைக்குச் சென்று விசேட ஆராதனையை நிகழ்த்தி ஆசீர்வாதம் வழங்கினார்.

வியாழக்கிழமை (27) மாலை 4.30 மணிக்கு காரைதீவு இராமகிருஷ;ணமிசனில் பக்தர்களுக்கு அருள் வழங்கவுள்ளார்.

வெள்ளிக்கிழமை (28) கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கும், திங்கள் (31) இரம்போடைக்கும், செவ்வாய்க்கிழமை (01) நுவரெலியா மற்றும் கண்டிக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.