போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு : மண் ஏற்றுபவனுக்கு வெடி – பிள்ளையான்

இரண்டாயிரம், மூவாயிரம் கோடி ரூபாவுக்கு போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்கும் அதேவேளை, அன்றாடம் மண் ஏற்றுபவனுக்கு வெடி என நீதிமன்ற வாயில் வைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள்  முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்தார்.

 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான விசாரணைக்காக இன்று நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட போதே பிள்ளையான், அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், அந்த கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஷ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படுகின்ற கனநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் வினோத் எனப்படும் வெலிக்கந்தையை சேர்ந்த மதுசங்க ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

virakesari