அச்சத்தில், மீண்டும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில்

பெற்றோலிய தொழிற் சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் தொடர்ப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு நேற்று மாலை 5 மணியளவில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக மக்கள் முண்டியடித்தனர்.  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டள்ளது.