தொடரும் வறட்சி: குடிநீரை விலைக் கொடுத்து வாங்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியின் தாக்கம் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வலுப்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரன்குடா மக்கள் குடிநீருக்காக அல்லலுறும் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது

குடி நீருக்காக இந்த கிராமத்தில் இரண்டு பொதுக் கிணறுகளே பயன்படுகின்றன.

நிலவும் அதிக வறட்சியால் இரண்டு கிணறுகளும் வற்றிப் போயுள்ளன.

இதனால் தமது தேவைக்காக 1500.00 ரூபா செலவில் குடி நீரைப் பெற்று கிணற்றினுள் அந்த நீரை ஊற்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பிரதேச செயலாளரிடம் தமக்கு முறையான விநியோக முறைமையொன்றை தருமாறு இந்த மக்கள் பல தடவைகள் கோரிய போதும் எவ்வித தீர்வும் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது இந்த மக்களின் ஆதங்கம்….