கொக்கட்டிச்சோலையில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள்  திங்கட்கிழமை சோதனையிடப்பட்டன.
மகிழடித்தீவு சுகாதார பரிசோகர், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை, கொக்கட்டிச்சோலை பொலிஸார் இணைந்து உணவகங்கள் மற்றும் பழக்கடைகளை பரிசோதனை செய்தனர்.
சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட அழுகிய பழங்கள் மண்ணெண்ணெய் ஊற்றி இதன் போது அகற்றப்பட்டன.
உணவு சமைக்கும் இடங்கள், உணவுபொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் பார்வையிடப்பட்டது. மேலும் உணவகங்களில் உள்ளவர்களின் மருத்துவசான்றிதழ், பிரதேசசபையின் அனுமதி பத்திரம் போன்றனவும் இதன்போது பரிசீலிக்கப்பட்டன.