காத்தான்குடியில் மறைக்கப்படும்,மறுக்கப்படும் தமிழ்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப்பிரதேசத்தில் தற்போது சிலநிகழ்வுகளில் தமிழ்மொழிக்கோ, சிங்களமொழிக்கோ முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றனது.

அண்மையில் காத்தான்குடியில் சவுதிஇளவரசர் கலந்து கொண்ட நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாதையில்  நமது ஐனாதிபதியின் படம்,இராஐாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா உட்பட சவுதி பிரதிநிதிகளின் படங்களும் காணப்பட்ட நிலையில் பதாதையில் அரபிமொழிக்கும், ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.ஆனால் தமிழ் மொழியோ, சிங்களமோ அங்கு காணப்படவில்லை.
இலங்கை குடியரசின் அதிமேகு சனாதிபதியின் படத்தை பதாதையில் காட்சிப்படுத்தியவர்கள் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளை ஏன் அச்சிடப்படவில்லை என  சமுக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
போகுகிற போக்கைப்பார்த்தால் இன்னும் சிலவருடங்களில்100 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் காத்தான்குடியின் உத்தியோகபூர்வமொழியாக அரபுமொழிமாறிவிடுமோ என்ற எண்ணம் சமுக ஆர்வலர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.