மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 46வது வருட ஆண்டு விழா-படங்கள்.

 (பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 46வது வருட ஆண்டு விழா 22 நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது..

மட்டு- வை.எம்.சீ.ஏவின் பிரதித் தலைவர் எஸ்.பி.பிரேமசந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவர் ஈ.வி.தர்ஷன் , அதன் பொதுச் செயலாளர் ஜீ.ஜெகன் ஜீவராஜ்,தாய்வான் நாட்டின் தாய்ச்சுன் சர்வதேச வை.எம்.சீ.ஏவின் பிரதிநிதிகள், முன்னாள் மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவரும்,முன்னாள் மட்டு-மாநகர சபையின் பிரதி மேயருமான ஜோர்ஜ்பிள்ளை ,இயக்குனர் சபை உறுப்பினர்களான திருமதி.மதிதரன், எம்.இதயகுமார்,டிக்ஷன் றாகல், ஏ.ரவிந்திரன், கே.அன்புராஜ்,ரீ.கிருபைராஜா உட்பட மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் பிரதிநிதிகள், வை.எம்.சீ.ஏ வாழ்வோசை பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டதுடன், மட்டு –வை.எம்.சீ.ஏவின் 46வது வருட ஆண்டு பிறந்த நாள் கேக்கும் வெட்டப்பட்டது.

இங்கு மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.