மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில்

0
653
எஸ்..பாக்கியநாதன்
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு கண்டணம் தெரிவித்து மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு நீதிமன்றின் எதிரே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றனர்..

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கே. நாராயணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள் கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷமெழுப்பினர்.
தோட்டாவில் புதையாது தேடிய நீதி, சுட்டதால் சட்டம் சாகாது, தலையிடாதே நீதித்துறையில் தலையிடாதே, நீதிக்கே சவாலா, நேற்று நீதிபதி
அம்பேபிட்டிய, இன்று இளஞ்செழியன் நாளை யாரோ, உயிர் நீத்து நீதிகாத்த காவலனுக்கு அஞ்சலி போன்ற வாசகங்கள அடங்கிய பதாதைகளை சட்டத்தரணிகள் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான டி.சி.சின்னையா, வி.வினோபா இந்திரன் உள்ளிட்ட மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டனங்களை வெளிப்படுத்தினர்.