பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மாணிக்கம் உலககேஸ்பரம் ஓய்வு பெற்றுள்ளார்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாக கொண்ட இவர்  08.06.1978 ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்டு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்று மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிறந்த கணித ஆசிரியராக 1991 வரை சேவையாற்றினார். இதன் பின்னர் அதிபர் போட்டி பரீட்சையில் சித்தியடைந்து அதிபராகவும் பிரதி அதிபராகவும் பல பாடசாலைகளில் சேவையாற்றினார். 1992 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக்தில் தனது கலைமாணி பட்டத்தினை பெற்றுக் கொண்டார்..

    1999 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்கான போட்டிப் பரீட்iசியில் சித்தியடைந்து போரததீவுப் பற்று, பட்டிப்பளை அகிய கல்விக்  கோட்டங்களுக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார். இக்கால கட்டத்தில் கிழக்கு பல்கலைக் கழகத்தில் கல்விக்கான முதுமாணி பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்..
பின்னர் பட்டிருப்பு கல்வி வலயத்தின்  கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும், கல்குடா கல்வி வலயத்தில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றி மீண்டும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றி 23.07.2017 இல் தனது 60 வது வயதில் ஓய்வு பெற்றுள்ளார். இவர்  திறந்த பல்கலைக் கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும், முதன்மையாசிரியராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக்கல்வி நிகழ்ச்சி திட்டத்தின் சிரேஷ்ர போதனாசிரியராகவும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.