மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியாளர்கள் இனவாதத்தை கக்கி வடகிழக்கில் யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முயற்ச்சிக்கின்றார்கள்.

(க.விஜயரெத்தினம்)
தென்னிலங்கை அரசியல்வாதிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இனவாதத்தை கக்கி மீண்டும் வடகிழக்கில் யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முயற்ச்சிக்கின்றார்கள் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்..

களுதாவளையில் முந்நூறு மில்லியன் ரூபா  பொருளாதார அமைச்சின் நிதியொதூக்கீட்டில் புதிய பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று (22.7.2017) காலை 10.45.மணியளவில்  நாட்டிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்து உரையாற்றும் போதே மேலுள்ளவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்:- கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலி அவர்கள் ஒரு தியாக சிந்தனையாளர்.ஏன்னென்றால் அவர் வாழும் பிரதேசம் கல்குடாத்தொகுதியாகும்.அவர் தனது தொகுதிக்கும்,தொகுதிமக்களுக்கும் அபிவிருத்தி வேலையை செய்யாமல் விட்டுக்கொடுப்பு,தியாக சிந்தனையுடன் பட்டிருப்பு தொகுதி மக்களை நேசித்து பட்டிருப்பு தொகுதியை மையப்படுத்தி, இன்று களுதாவளை கிராமத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு முழுமூச்சாக நின்று, அடிக்கல்லை நாட்டிவைத்துள்ளார் என்றால் அது வரவேற்கத்தக்கதாகும்.அதற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
இன்று கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் மூன்று பொருளாதார மத்திய நிலையங்களை  எனது அமைச்சு செயற்படுத்தியுள்ளது.வவுனியா,மாங்குளம் ஆகிய இடங்களில் இந்த மாதப்பகுதிகளிலில்  அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.அதே போன்று இம்மாத இறுதியில் கிளிநொச்சியில் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கு உள்ளோம்.
கடந்த ஆட்சியின் ஆட்சியாளர்கள்  தெற்கில் மட்டும் அமைப்பதற்கு மட்டுப்படுத்தியிருந்தார்கள்.இப்போது வடகிழக்கு பகுதியெங்கும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.இதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடாகும்.குறிப்பாக யுத்தத்தினால் இழப்புக்களை சந்தித்த தமிழ்மக்கள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோர்கள் நல்லாட்சியை ஏற்பாடுத்திய தமிழ்மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளார்கள்.
இந்த பொருளாதார மத்திய நிலையங்களை பத்து(10)வருடங்களுக்கு முன்பு கட்டியிருந்தால் இப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கலாம்.இதனால் இம்மக்கள் கஸ்டப்பட்டிருக்க மாட்டார்கள்.யுத்தத்தை வெற்றி கொண்ட மஹிந்த ராஜபக்ஷ தமிழ்மக்களின் மனங்களை திருப்தி படுத்தும் வகையில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.இதுவே மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியாளர்களின் செயற்பாடாகும்.இது அரசியல் வங்குரோத்தை எடுத்துக் காட்டுகின்றது.
எமது அரசாங்கம் வடகிழக்கு  மக்களையும்,தென்பகுதி மக்களையும் இணைத்து நல்ல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
கடந்த முப்பது வருடங்கள் நாட்டில் யுத்தம் மழையாக பொலிந்தது.துப்பாக்கி வேட்டுச்சத்தம் கனத்ததால் ஒன்றும் தெரியாத மக்கள் பலியானார்கள்.இதனால் தமிழ்மக்கள் இரண்டுபக்கமும் அடிபட்டார்கள்.அரசபடை, ஆயுதபடைகளினால் அச்சம் தொடர்ந்தது.அச்சம் நீக்கப்பட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியாளர்கள் இனவாதத்தை கக்கி வடகிழக்கில் யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முயற்ச்சிக்கின்றார்கள்.
இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களின் மனங்களை வென்று அவர்களின் தேவையை நிவர்த்தி செய்து கொடுப்பதுதான் விருப்பதுதான் எமது தேவையாகும்.இன்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம். நூற்றுக்கு மேற்பட்ட லோறிகள் உற்பத்திகளை எடுக்கவருகின்றது.இப்பகுதிகளின் விவசாய உற்பத்தியை எடுப்பதற்கு நாளாந்தம் நூறுக்கு மேற்பட்ட லொறிகள் இப்பகுதியில் செய்யப்படும் விவசாயிகளின் காய்கறிகள்,பழங்கள் என்பனவற்றை எடுத்துச்செல்வதற்கு செயற்பட்டால் இப்பகுதி பொருளாதார கேந்திர மத்திய நிலையமாக மாற்றமடைவதில் அச்சமில்லை.
இதனால் கஸ்டப்பட்ட மக்களின் விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு நல்ல கேள்வியும் விலையும் நிர்ணயிக்கப்படும்.கஸ்டப்படும் மக்களின் தேவையையும், அவர்களின் மனங்களையும் திருப்தி படுத்துவதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் தேவையாகும் எனத் தெரிவித்தார்.