நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் பலி

நீதிபதி இளஞ்செழியனுக்கு 18 வருடங்கள் நம்பிக்கைக்குரியவராக இருந்த மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின்போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் இன்று அதிகாலை 2 மணியளவில்   உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில்  58  வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஹேமரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி நபர் ஒருவர் நேற்று மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

 

இந்தத் தாக்குதலின்போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்திருந்தனர்.

உடனடியாக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு மெய்ப்பாதுகாவலர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் பலத்த காயமடைந்திருந்த மெய்ப்பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மெய்ப்பாதுகாவலர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக 18 வருடங்கள் இருந்துள்ளதுடன், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்துள்ளார்.