மட்டக்களப்புக்கு சவுதி அரேபியாவின் இளவரசா் குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.

சவுதி அரேபியாவின் இளவரசா் தற்போதைய இளவரசரரின் சகோதரரும் முன்னணி உலக முதலீட்டு வா்த்தகருமான இளவரசா் பஹ்த் பின் முக்ரின்ஸின் அப்துல் ்அசீஸ் மற்றும் துாதுக்குழுவினரும் நேற்று (21) பி.பகல்  கொழும்பை வந்தடைந்தனா்..

இவா்களை இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் விமானநிலையத்தில் வைத்து வரவேற்றாா். சகல ஏற்பாடுகள் சந்திப்புக்களை இராஜாங்க அமைச்சா் மேற்கொண்டுள்ளாா்.

இவ் சவுதி துாதுக் குழுவினா் இலங்கையில் 4 நாட்கள் தங்கியிருப்பாா்கள். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முதலீட்டு அமைச்சா் மலிக் சமரவிக்கிரமசிங்க, வெளிநாட்டு அமைசசா் ரவி கருநாயக்காவையும் சந்திப்பாா்.

இத்துாதுக்குழுவினா் நாளை (23) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விமான மூலம் சென்று அங்குள்ள நிலைமைகளையும் அவதானிப்பாா். அத்துடன் இவா்களை வரவேற்பதற்காக இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

இன்று (22) காலை கொழும்பில் உள்ள இராஜாங்க அமைச்சாின் அமைச்சில் இத் துாதுக்குழுவினருடன் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் இலங்கையில் சுற்றுலாத்துறை, வீடமைப்பு இலங்கையில் தொழிற்சாலைகள் நிர்மாணத்துறை சம்பந்தபட்ட துறைகளில் முதலிடுவதற்காக இலங்கை பாரிய வசதிகள் உள்ளதை இராஜாங்க அமைச்சா் துாதுக்குழுவிடம் விளக்கிக் கூறினாா்.

அத்துடன் யுத்தம் முடிவடைந்து இலங்கை வெளிநாட்டு முதலீட்டில் பாரிய பங்கினை வகிக்கின்றது.

தமது முதலீடுகள் சம்பந்தமாக நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம், வீடமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை சாா்ந்த நிறுவனங்களின் தலைவா்களையும் இவா்கள் தங்கியிருக்கும் காலத்தில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை இராஜாங்க அமைச்சா் மேற்கொண்டுள்ளாா்.  இச்சந்தப்பில் அத்துடன் அப்துல் காதா் மசுர் மௌலானாவும் கலந்து கொண்டாா்.